பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் பரபரப்பு

லோரன்ஸ் செல்வநாயகம்

நாட்டில் நடைமுறையிலுள்ள பயணத்தடை நேற்று தற்காலிகமாக தளர்த்தப்பட்டபோது மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு அருகே பெருமளவில் திரண்டிருந்ததைக் காண முடிந்தது.

சில வர்த்தக நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு முன்பாக மக்கள் பெரும் அணியாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து நின்றிருந்த போதும் சில வர்த்தக நிலையங்களிலும் மீன் விற்பனை கடைகளிலும் பெருமளவு மக்கள் கூட்டமாக திரண்டிருந்ததைக் காண முடிந்தது. வழமைக்கு மாறாக நேற்றைய தினம் மரக்கறி, மீன் மற்றும் ஏனைய அன்றாட உணவு பொருட்களின் விலை சற்று அதிகமாகவும் காணப்பட்டது.

அதேவேளை, பேலியகொடை மெனிங் வர்த்தக நிலையம் நேற்றைய தினம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறந்திருந்த நிலையில் மரக்கறிகள் மற்றும் பழங்களுடன் சுமார் 350 லொறிகள் நேற்றுக் காலை அங்கு வந்து சேர்ந்தன.

அங்கு மரக்கறிகள் கிலோ ஒன்றின் விலை 200 ரூபாய் வரை விற்பனை செய்ததை காண முடிந்தது.

அதேவேளை பேலியகொடை மீன் சந்தை நேற்று அதிகாலை முதல் திறக்கப்பட்டதுடன் பெருமளவில் சிறு மீன் வியாபாரிகள் அங்கு மீன் கொள்வனவுக்காக வருகைதந்தி ருந்ததைக் காண முடிந்தது.

நேற்றைய தினம் பயணத்தடையில் தற்காலிக தளர்வு இடம்பெற்ற போதும் மதுபானசாலைகள் திறக்கப்படவில்லை. நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் ஜூன் 07ஆம் திகதிவரை மூடப்படும் என தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.(ஸ)

Wed, 05/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை