கொரோனாவை அரசியலாக பார்க்காதீர்கள்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சுகாதார துறையினரின் அறிவுறுத்தலை பின்பற்றுங்கள் - கொரோ னாவை அரசியலாக பார்க்காதீர்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த கருத்து,...

கொரோனா தொற்று என்பது சுகாதார துறையினருடன் தொடர்புடைய ஒரு விடயமாகும். எனவே அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்.என்ன நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

பொது மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை நன்கு அறிந்தவர்கள் சுகாதார துறையினர். அவர்களுடைய வழிகாட்டலில் ஏனையவர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து சுகாதார துறையினரின் வழி காட்டல்கள் இல்லாமல் இதனை கட்டுப்படுத்த முடியாது.

கடந்த காலங்களில் எங்களுடைய நாட்டில் ஏற்பட்ட பல தொற்று நோயை கட்டுப்படுத்தியவர்கள் இந்த நாட்டின் சுகாதார துறையினர்.எனவே அவர்களிடம் இதனை கையளிப்பதே சிறந்தது.

நாடடில் யுத்தம் இருந்த கால கட்டத்தில் அதனை முப்படையினரே செய்தனர். அதற்கு அவர்களுக்கு ஏனைய தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கினார்கள். யுத்தத்தில் சுகாதார துறையினரின் ஆலோசனைகளோ அல்லது அவர்களுடைய வழிகாட்டல்களோ இருக்கவில்லை.

Mon, 05/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை