Header Ads

சிரிய ஜனாதிபதி தேர்தலில் அசாத்திற்கு 95.1 வீத வாக்கு

சிரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய பஷர் அல் அசாத் நான்காவது தவணைக்கு பதவி ஏற்கவுள்ளார். இந்தத் தேர்தலில் 78.6 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றதாகவும் அசாத் 95.1 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியதாகவும் சபாநாயகர் ஹம்மவுதா சபாக் கடந்த வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அசாத்தை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா சலூ அப்துல்லா மற்றும் மஹ்மூத் அஹமது மாரி ஆகியோர் முறையே 1.5 மற்றும் 3.3 வீத வாக்குகளையே வென்றுள்ளனர்.

எனினும் இந்தத் தேர்தல் ஒரு கேலிக்கூத்து என்று சிரிய எதிர்த்தரப்பினர் குறிப்பிட்டிருப்பதோடு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இது சுயாதீனமான அல்லது நியாயமான தேர்தல் இல்லை என்று குறிப்பிட்டுள்ளன.

கடந்த புதனன்று தனது வாக்கை அளித்த அசாத், மேற்குலகின் கருத்தை யாரும் பொருட்படுத்தவில்லை என்றார். சிரியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sat, 05/29/2021 - 12:44


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.