60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் சினோபார்ம் தடுப்பூசி வழங்க தீர்மானம்

நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்ள அரசு தயார்

நாடளாவிய ரீதியில் 30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் எந்தவித ஒவ்வாமையும் காணப்படாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அந்த தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் நான்கு வாரங்களுக்கு மக்கள்  மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர், அனைத்து நெருக்கடி நிலையையும் எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்கு சுகாதார வழிகாட்டல்களே சிறந்த தீர்வாகும் என தெரிவித்துள்ள அவர், வீடுகளுக்கு வைரஸை கொண்டு செல்லும் வகையில் செயற்பட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 05/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை