ரஷ்யாவிலிருந்து மேலும் 6 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்

ரஷ்யாவிலிருந்து மேலும் 6 இலட்சம் ஸ்புட்னிக் வி (Sputnik V) தடுப்பூசிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி ​கடந்த 3ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது.  

அதனடிப்படையில், முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 05/13/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை