5 எம்.பிக்கள் வீடுகளில் வைத்து தனிமைப்படுத்தல்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவோடு தொடர்புகளை கொண்டிருந்தமை காரணமாக எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார,  துஷார இந்துனில், அசோக் அபேசிங்க மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது மனைவி ஜலனி பிரேமதாசவும் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை தெரியவந்தது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு எதிர்கட்சித் தலைவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

அந்த வகையிலேயே மேற்படி ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்கட்சித் தலைவரோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த சிலருக்கு சுகாதார வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த வகையில் மேற்படி உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அண்மித்த தொடர்புகளை கொண்டிருந்தமை பாராளுமன்ற சிசிடிவி கெமரா மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவருடன் அண்மித்த தொடர்புகளைக் கொண்டிரேந்த பாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை