நாடு முழுவதும் இன்று மாலை 5.46 க்கு விசேட பிரார்த்தனை

பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாடு

உலகை உலுக்கிவரும் கொரோனா தொற்று நீங்கி சுபீட்சமானதொரு வாழ்வு மலர, உலக மக்களின் நன்மையையும் இலங்கை வாழ் மக்களின் நன்மையையும் வேண்டி சர்வமத பிரார்த்தனையை ஒரே நேரத்தில் இன்று மாலை 5.46 மணியளவில் ஜனாதிபதி,  பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கையிலுள்ள சகல மதத் தலங்களிலும் வழிபாட்டு பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் இந்து விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி சிவ சிறி இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இந்து ஆலயங்கள் அனைத்திலும் இன்று மாலை 5.46 மணியளவில் மிருத்யுஞ்சய ஹோமம் குறிப்பாக பஞ்ச ஈஸ்வர தலங்களிலும் நிகழ்த்தப்படும். கொரோனா அச்சுறுத்தலால் பூஜை வேளையில் அனைவரும் வீட்டிலிருந்தவாறே பிரார்த்தனை செய்து, தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.

கொரோனா இலங்கையை விட்டு நீங்க வேண்டும். முழு உலகத்தை விட்டும் நீங்க வேண்டும். கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் சுகமடைய வேண்டும். எல்லோரும் வளமான வாழ்க்கையை பெற வேண்டும் என்று இறைவனை மனதார நாம் அனைவரும் ஒருமித்து பிரார்த்திப்போம். இந்த பிரார்த்தனை மூலம் நாங்கள் இந்த கோரோனாவிலிருந்து விடுபட வேண்டும் எல்லோரும் சுபீட்சமாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையாக இது அமையட்டும்.

சகல ஆலயங்களிலும் இன்று மாலை 5.46 மணியளவில் விசேட பூசைகள் நடைபெறும். அனைவரும் தீபமேற்றி பிரார்த்தித்து, இந்த மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெறும் போது பக்தி பூர்வமாக பிரார்த்தனை செய்யவும்.

இதற்கான அறிவுறுத்தலை இந்து கலாசார திணைக்களம் அறிவித்துள்ளதாக புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான பிரதமரின், இந்த மத அலுவல்கள் விவகார இணைப்பாளர் கலாநிதி சிவ சிறி இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

Sat, 05/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை