சீனாவின் 5 இலட்சம் தடுப்பூசி செவ்வாய் வரும்

மேலும் 14 மில். வழங்க சீனா இணக்கம்

சீனா இலங்கைக்கு அன்பளிப்புச் செய்ய தீர்மானித்துள்ள ஐந்து இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்த செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்படும் என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன தயாரிப்பு கொரோனா வைரஸ் தடுப்பூசியான சைனோபார்ம் தடுப்பூசி 14 மில்லியனை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க சீனா தீர்மானித்துள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக 3 லட்சம் தடுப்பூசிகள் ஒரு மாதத்திற்குள் இலங்கைக்குப் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் கொழும்பிலுள்ள சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள சீனத் தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சீனத் தூதரகம் நேற்று தெரிவித்தது.

அதேவேளை, நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி முதல் தடவையாக நான்கு இலட்சத்து 74 ஆயிரத்து 685 பேருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை