அமெரிக்காவிடமிருந்து 4,700 PCR பரிசோதனை கருவிகள்

இலங்கைக்கு நன்கொடையாக கிடைத்தது

13 மில்லியன் ரூபா பெறுமதியான 4,700 பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளை அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கையின் கொரோனா ஒழிப்பு செயல்முறையை ஆதரிப்பதற்காக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இந்த பி.சி.ஆர். சோதனை கருவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவிலிருந்து மீட்பு நோக்கங்களுக்காக அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து அமெரிக்க தூதரகத்தின் சிவில் இராணுவ பிரிவு இதனை வழங்கியுள்ளது.

இந் நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டாக்டர் சஞ்சீவ முனசிங்க, அரச மருந்துகள், வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் டி அல்விஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Wed, 05/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை