நாடளாவிய 32 தபால் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை பூட்டு

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள 32 தபால் நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

மறு அறிவித்தல் வரை மேற்படி தபால் நிலையங்கள் மூடப்படுவதாக தெரிவித்துள்ள அவர், அவற்றுள் நான்கு பிரதான தபால் நிலையங்களும் 28 உப தபால் நிலையங்களும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு தபால் நிலையங்களிலும் 50க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.தற்போதைய சூழ்நிலையில் தபால் சேவை நடவடிக்கைகளில் சிறு தாமதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 05/05/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை