சதொச விற்பனை நிலையங்கள் மே 31, ஜூன் 4களில் திறப்பு

அமைச்சர் பந்துல தெரிவிப்பு

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு அமுலிலுள்ள பயணத்தடை எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 04 ஆம் திகதிகளில் தற்காலிகமாக தளர்த்தப்படும். இந்த இரு தினங்களிலும் நாடு முழுவதுமுள்ள அனைத்து ச.தொ.ச விற்பனை நிலையங்களையும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வர்த்தகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினல் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் 5, 000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவு நிவாரண பொதியை பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் விநியோகிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது.

கொவிட் -19 தாக்கத்தைக் கருத்திற் கொண்டு தற்போது நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 04 ஆம் திகதிகளில் தற்காலிகமாக தளர்த்தப்படும். இந்த இரு தினங்களிலும் அனைத்து ச.தொ.ச விற்பனை நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் பயணத்தடையின்போது ச.தொ.ச விற்பனை நிலையங்களூடாக அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடமாடும் சேவையை செயற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் பொது மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும் முறையான நட்வடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிகொள்ள முடியுமென அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

Wed, 05/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை