பெருநாள் தினத்தில் கலவரம்: 30 பேருக்கு மரண தண்டனை

கொங்கோ தலைநகர் கின்சாஷாவில் நோன்புப் பெருநாள் தினமான கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வன்முறைகளில் தொடர்புபட்ட 30 பேருக்கு ஒரு நாள் வழக்கு விசாரணை மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதான விளையாட்டு அரங்கு ஒன்றில் போட்டி முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்டார்.

பெருநாள் தொழுகை நடத்துவதற்காக இந்த போட்டி முஸ்லிம் குழுக்கள் விளையாட்டு அரங்கில் ஒன்றுகூடி நிகழ்வில் அந்தப் பிரார்த்தனையை முன்னின்று நடத்துவது யார் என்பதிலேயே இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ள நிலையிலும் இந்த வன்முறை காரணமாக பொலிஸார் சிலர் படுகாயத்திற்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாற்பத்தி ஒரு பேர் கைது செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை முழுவதும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. அந்த வழக்கு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

கொங்கோவில் மரண தண்டனை இல்லை என்பதால் இவர்கள் ஆயுள் தண்டனைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

 

Mon, 05/17/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை