Header Ads

ஆப்கானில் கார் குண்டு தாக்குதல்: 30 பேர் பலி

ரமலான் நோன்பு துறந்த சிறிது நேரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஆப்கானிஸ்தானில் மாணவர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை ஒன்றில் கடந்த சனிக்கிழமை மாலை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நோன்பு துறந்து சற்று நேரத்தில் மருத்துவமனைக்கு வெளியே திடீரென கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மருத்துவமனை கட்டடம் மற்றும் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் ஆகியவை பலத்த சேதமடைந்தன. மருத்துவ துறையை சார்ந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பல்கலைக்கழக நுழைவு தேர்வு எழுதி விட்டு, நோன்பு துறப்பதற்காக மருத்துவமனையை சுற்றியிருந்த சிறிய உணவு விடுதிகளில் சாப்பிடச் சென்றவர்கள் அதிகம் பேர் இலக்காகியுள்ளனர்.

Mon, 05/03/2021 - 08:42


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.