பசறை 3ஆம் கட்டை விபத்து; ஒருவர் பலி: 10 பேர் படுகாயம்

பதுளை - பசறை மூன்றாம் கட்டை பகுதியில்  நேற்றுமுன்தினம்  பகல் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில்  ஒருவர் பலியாகியதுடன் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பதுளையிலிருந்து   தியனகல தோட்டத்திற்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி  விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வேனின் சாரதியான ராஜேந்திரன் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இவ்விபத்து தொடர்பாக பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மடுல்சீமை நிருபர், பதுளை தினகரன் விசேட நிருபர்
 

Fri, 05/14/2021 - 10:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை