மேலும் 29 மரணங்கள்; இதுவரை இலங்கையில் 921 கொவிட்-19 மரணங்கள்

மேலும் 29 மரணங்கள்; இதுவரை இலங்கையில் 921 கொவிட்-19 மரணங்கள்-29 More COVID19 Related Deaths Reported-Increasing Total Deaths to 921

- 18 பெண்கள், 11 ஆண்கள்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 29 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (14) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 892 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 24 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 921 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் 15 பேர் நேற்று முன்தினமும் (13), மே 10, 11, 12, 14ஆம் திகதிகளில் தலா 3 பேரும், கடந்த மே 09ஆம் திகதி 2 பேரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 05/15/2021 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை