இவ்வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் 26 ம் திகதி பௌர்ணமி தினத்தன்று

இந்த வருடத்துக்கான முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் 26ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று இடம்பெறவுள்ளது. பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய ஒளி நிலவில்  படாத நிகழ்வே சந்திர கிரகணமாக நிகழ்கிறது.

ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அதுவே பூமிக்கு மிக அருகில் வரும்போது, முழு நிலவாக இருப்பின் 'சூப்பர்மூன்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, முழு நிலவு வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச்சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அதனால் செம்மஞ்சள் நிறத்திலிருந்து இரத்தச் சிவப்பு நிறங்களில் நிலவு காணப்படுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆசியாவில் சில நாடுகள், அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா, பசுபிக், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிகா பகுதியில் முழு சந்திர கிரகணத்தை பார்வையிட முடியுமென்றும் இந்தியாவில் முழு சந்திர கிரகணம் ஒரு பகுதி அல்லது புறநிழல் சந்திர கிரகணமாக மட்டுமே தென்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும், 26ஆம் திகதி மதியம், 2:17 மணிக்கு முதல் இரவு, 7:19 மணி வரை இந்த நிகழ்வு மிக நீண்ட சந்திர கிரகணமாக அமையும்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 05/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை