இறுதிக்கிரியைகளை 24 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்குமாறு கொரோனா குழு பணிப்பு

மரண இறுதிக்கிரியைகளை 24 மணி நேரத்திற்குள் நிறைவு செய்ய வேண்டுமென மாத்தளை மாவட்ட கொரோனா தடுப்புக் குழு அறிவித்துள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் கொரோனாத் தொற்றை ஒழிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்மானம் மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது .கொரோனா தொற்று தடுப்பு செயலணியின் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் நிஸாந்த மானகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் ஆகியோரின் தலைமையில் தம்புள்ள பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்,இத்தீர்மானம் உட்பட இன்னும் சில முக்கிய விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப் பட்டது.

மாத்தளை மாவட்டத்தின் அனைத்து கிராம சேவை அலுவலர் பிரிவுகளிலும் பணியாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுடன் இணைந்து சுய பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குதல்,குறித்த குழுக்களிடம் கிராம சேவைப் பிரிவின் பாதுகாப்பு, கொவிட் கட்டுப்பாடு ஆகிய பொறுப்புக்களை ஒப்படைத்தல் பற்றியும் தீர்மானிக்கப்பட்டதாக மேலதிக செயலாளர் மேலும் தெரிவித்தார். மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், மாகாண சபைத் தலைவர்கள் உள்ளிட்டோரின் விசேட வழிநடத்தலின் கீழ்,கொரோனா பாதுகாப்பு நடைமுறைறைகளை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

தம்புள்ள தினகரன் நிருபர்

Mon, 05/03/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை