சீனாவில் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற 21 பேர் உயிரிழப்பு

சீனாவில் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற 21 பேர் உயிரிழப்பு-China Ultra Marathon 21 Dead

சீனாவில் கடும் வானிலை காரணமாக மலைப்பகுதியில் நடத்தப்பட்ட ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட 21 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

கான்சு மாநிலத்தில் உள்ள யெல்லோ ரிவர் ஸ்டோன் காடுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட 100 கிலோமீற்றர் குறுக்கோட்டத்தில் 170க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆலங்கட்டி மழை, உறைபனி மழை, பலத்த காற்று ஆகியவற்றின் மத்தியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. காலையில் சுமார் 150 பங்கேற்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

நேற்று இடம்பெற்ற மீட்பு மற்றும் தேடுதலின்போது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

1,200 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டபோதும் வெப்பநிலை கணிசமாக குறைந்ததால் இரவு நேரத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக பெயின் நகர மேயர் சாங் சுசன் தெரிவித்துள்ளார்.

யெல்லோ ரிவர் ஸ்டோன் காடு கரடுமுரடான 50 சதுர கிலோமீற்றர் பகுதி என்பதோடு அங்கு கண்கவர் கற்சுவர்கள் பரந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/24/2021 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை