பட்டப்படிப்பு பூர்த்தி பெறும் வயதெல்லை 21

பல்வேறு நாடுகளில் 21 வயதை அடையும் போது, பிள்ளைகள் பட்டப்படிப்பை முடித்துக் கொள்கின்றனர். இலங்கை மாணவர்களுக்கும் இவ்வாறான வசதிகள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்பினூடாக எட்டு மாதங்களுக்கு முன்னர் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது.தரம் 10, 11ஆம் வகுப்புக்காகக இதுவரை இருந்த காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்கப்படவுள்ளது.

இறுதி இரண்டு வருடங்களுக்குள் இதன் பலன்களை மாணவர்களுக்கு வழங்குவது நோக்கமாகுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

Mon, 05/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை