ஏப்ரல் 21 போன்று மே 18 சுதந்திரமாக அனுஷ்டிக்க அனுமதிக்க வேண்டும்

ஏப்ரல் 21 போன்று மே 18 சுதந்திரமாக அனுஷ்டிக்க அனுமதிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொது மக்களை நினைவு கூருவதற்கு பூரண சுதந்திரத்தை அரசு வழங்கியது. 

இதுபோன்று 2009 மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தில் பாதிக்கப்பட்ட உறவுகள் தம் இறந்த உறவுகளை நினைவு கூர இடையூறுகள் புரியாது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாது பூரண அனுமதியை வழங்க வேண்டும். 

இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட தரப்பினர் யாராக இருந்தாலும் மனித நேய அடிப்படையில் அவர்களது அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும். அதுவே உண்மையான ஐனநாயகப் பண்பு.அந்த வகையில் தெற்கில் யுத்த வெற்றியை கொண்டாடும் போது வடக்கு,கிழக்கில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்தல் நீதி அல்ல. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதே நாட்டின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் புதிய வழியை உருவாக்கும்.    

Sat, 05/01/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை