1st ODI; SLvBAN; துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 257/6

1st ODI; SLvBAN; துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 257/6-1st ODI-SLvBAN-BAN-257-6

- முஸ்பிகுர் 84, மஹ்முதுல்லாஹ் 54, தமீம் 52
- தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்டுகள்

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, தற்போது பங்களாதேஷின் டாக்கா நகரில் இம்பெற்று வருகிறது.

இப்போட்டிக்காக பங்களாதேஷ் பயணமாகியுள்ள, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸ் மற்றும் பந்துவீச்சாளர் இசுறு உதான ஆகியோருக்கு மேற்கொண்ட PCR சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட இரண்டாவது PCR சோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

புதுமுக வீரர் ஷிரான் பெனாண்டோவுக்கு கடந்த 2ஆவது டெஸ்டின் போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றையதினம் டாக்காவில் இடம்பெற்று வரும் குறித்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில், பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளர் முஸ்பிகுர் ரஹீம் 84 (87) ஓட்டங்களை பெற்றதோடு, மஹ்முதுல்லாஹ் 54 (76) ஓட்டங்களையும், அணியின் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் 52 (70) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 3 (3/45) விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, துஷ்மந்த சமீர, தனுஷ்க குணதிலக, லக்‌ஷான் சந்தகன் ஆகியொர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

BATTING   R B 4s 6s SR
Tamim Iqbal (c) lbw b DM de Silva 52 70 6 1 74.28
Liton Das  c DM de Silva b Chameera 0 3 0 0 0.00
Shakib Al Hasan  c Nissanka b Gunathilaka 15 34 2 0 44.11
Mushfiqur Rahim  c Udana b Sandakan 84 87 4 1 96.55
Mohammad Mithun  lbw b DM de Silva 0 1 0 0 0.00
Mahmudullah   b DM de Silva 54 76 2 1 71.05
Afif Hossain  not out 27 22 3 0 122.72
Mohammad Saifuddin  not out 13 9 2 0 144.44
Extras (lb 1, nb 2, w 9) 12  
TOTAL (50 Ov, RR: 5.14) 257/6  
Fall of wickets: 1-5 (Liton Das, 1.3 ov), 2-43 (Shakib Al Hasan, 12.1 ov), 3-99 (Tamim Iqbal, 22.5 ov), 4-99 (Mohammad Mithun, 22.6 ov), 5-208 (Mushfiqur Rahim, 43.1 ov), 6-230 (Mahmudullah, 47.1 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Isuru Udana 10 1 64 0 6.40 29 8 0 4 0
Dushmantha Chameera 8 0 39 1 4.87 25 4 0 1 0
Dhananjaya de Silva 10 0 45 3 4.50 29 1 1 1 1
Danushka Gunathilaka 2 0 5 1 2.50 7 0 0 0 0
PWH de Silva 10 0 48 0 4.80 31 3 1 1 0
Lakshan Sandakan 10 0 55 1 5.50 27 3 1 1 1

 

Sun, 05/23/2021 - 16:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை