1990 'சுவசெரிய' சேவைக்கு தினமும் 5,000 அழைப்புகள்

- சுமார் 1000 பேர் நாளாந்தம் பயன் பெறுகின்றனர்

1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவைக்கு நாளாந்தம் 5,300 இற்கும் அதிகமான அழைப்புகள் கிடைப்பதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரவித்துள்ளது.

இதனூடாக நாளாந்தம் 1000 இற்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நாடு முழுவதுமாக 297 சுவசெரிய அம்பியூலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுவதோடு, சுவசெரிய சேவை ஊழியர்கள் சங்கத்தின் ஊடாக 1394 வண்டிகள் இயக்கப்படுவதாகவும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.எவ்வாறாயினும், புதிதாக 112 அம்பியூலன்ஸ் வரையில் பற்றாக்குறையாக உள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 05/06/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை