நாட்டை முற்றாக முடக்கினால் நாளாந்தம் 15 பில்லியன் ரூபா நட்டம்

- பொருளாதாரம் சீர்குலைய அனுமதிக்க முடியாது

நாட்டை முற்றாக முடக்கினால் அதன் மூலம் தினமும் 15 பில்லியன் ரூபா வரையில் நட்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

கொவிட்-19 வைரஸ் தொற்று வேலைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவதற்கு இடமளிக்க முடியாதென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் யுத்த தளபாடங்களை பெற்றுக்கொள்ள பாரிய அளவிலான நிதி தேவைப்பட்டது.

அதேபோன்று தற்சமயம் கொவிட்19 வைரஸ் பரவும் இந்த சந்தர்ப்பத்திலும் சுகாதார உபகரணங்களை கொள்வனவு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாரியளவிலான பொருளாதார வளமே அரசாங்கத்திற்கு அவசியம் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் சனத்தொகையில் 60 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் அன்றாட வருமானம் ஈட்டுபவர்கள். நாட்டை முற்றாக முடக்குவதன் மூலம் இவர்களின் வருமானம் முழுமையாக தடைப்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தினூடாக இலங்கைக்கு வருடாந்தம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்மூலம் ஒவ்வொரு வருடமும் 04 இலட்சம் பேர் நாட்டின் தொழில் படையில் இணைந்துகொள்வார்களென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

துறைமுக நகர சட்டமூலத்தினூடாக அரசாங்கத்தின் பொருளாதார இலக்கை அடைந்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். 

Mon, 05/24/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை