கினியாவில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் 15 பேர் உயிரிழப்பு

கினியாவின் வட கிழக்கு சகுரி பிராந்தியத்தில் உள்ள இரகசியமாக இயக்கப்பட்ட தங்கச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சுரங்கத்தின் மேலால் பாறைகள் விழுந்த நிலையில் சிலர் அதில் புதையுண்டிருப்பதோடு மேலும் சிலர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். இந்த அனர்த்தம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் இரு பெண்கள் இறந்திருப்பதாக உள்ளூர் செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘இந்த சுரங்கத்தில் ஏற்கனவே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுரங்கத் தொழிலாளர்கள் அதிக ஆழத்திற்கு சென்றுள்ளனர். அதனாலேயே நில அமைப்பு பலவீனம் அடைந்துள்ளது’ என்று மேற்படி அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிகுரி பிராந்தியத்தில் இவ்வாறான நூற்றுக்காணக்கான ரகசிய சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கினியாவில் இடம்பெற்ற நிலச்சரிவில் பதினேழு பேர் கொல்லப்பட்டதோடு ஒன்பது மாதங்களின் பின்னர் இடம்பெற்ற பற்றொரு நிலச்சரிவில் மேலும் பலர் உயிரிழந்தனர்.

Tue, 05/11/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை