14 நாட்கள் நாடு முடக்கம் என சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்

அதில் உண்மை இல்லை என்கிறார் இராணுவத் தளபதி

14 நாட்களுக்கு நாட்டை முடக்கும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டை 14 நாட்களுக்கு முடக்குவதாக சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள்  முன்னெடுத்து வரும் நிலையில் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் ஜூன் 14 ஆம் திகதி வரை நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள இராணுவத் தளபதி அவ்வாறு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பிரசாரங்களுக்கு நாட்டு மக்கள் ஏமாறக் கூடாது என்றும் அவ்வாறு எத்தகைய தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உட்பட 3 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்பது கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவு நேற்றுக் காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

மேலும் சில கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் முடக்கத்தில் இருந்து நேற்றுக்காலை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் பலாலி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பொலிஸ் நிர்வாக பிரிவுக்குட்பட்ட கல்மடு, செவனகல உள்ளிட்ட நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மொணராகலை மாவட்டத்தில் நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நேற்று தனிமைப்படுத்திலுக்காக முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 05/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை