நாட்டில் 14 இலட்சம் பேருக்கு முதலாவது தடுப்பூசி

நாட்டில் நேற்றுவரை 14 இலட்சம் பேருக்கு முதலாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மாத்திரம் 33 ஆயிரத்து 17 நபர்களுக்கு மேற்படி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்தது. அதேவேளை நேற்று முன்தினம் எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி இரண்டாம் தடவையாக 5,229 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்தது.

அந்த தடுப்பூசி முதற்கட்டமாக 09 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசி முதல் கட்டமாக 14 ஆயிரத்து 917 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எஸ்ட்ரா செனேகா தடுப்பூசியை இரண்டாவது தடவையாக பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 97 ஆயிரத்து 686 எனவும் அந்த பிரிவு தெரிவித்தது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 05/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை