சீனாவின் மக்கள் தொகை 1.4 பில்லியனை தாண்டியது

சீனாவின் மக்கள்தொகை 1.4 பில்லியனைத் தாண்டியுள்ளது. மக்கள்தொகை, 5 வீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, 2020இன் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவித்தன.

சீனாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2020க்குள், மக்கள்தொகையைச் சுமார்

1.42 பில்லியனுக்கு உயர்த்த சீனா திட்டமிட்டிருந்தது.

கூடுதலான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளக் குடிமக்களுக்கான சலுகைகளை அதிகரிக்கும் கட்டாயத்தை, இந்தக் கணக்கெடுப்பு முடிவு ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மக்கள்தொகையில் மிதமான தொடர் வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளதாக சீனா கூறியது.

பொருளாதார வளர்ச்சியை நிலைநாட்டவும் செழிப்பை

அதிகரிக்கவும் விரும்பும் நிலையில், சீனா தனது மக்கள்தொகை பற்றி அக்கறை கொண்டுள்ளது.

மூப்படையும் சமூகத்தாலும் மெதுவடையும் குழந்தைப் பிறப்பு விகிதத்தாலும் எதிர்காலத்தில் மக்கள்தொகை தொடர்பான நெருக்கடி உருவாகலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 

Wed, 05/12/2021 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை