13 மாவட்டங்களில்: 88 கிராம 8 GS பிரிவுகள்; 6 பொலிஸ் பிரிவுகள் முடக்க நிலையில்

13 மாவட்டங்களில்: 88 கிராம 8 GS பிரிவுகள்; 6 பொலிஸ் பிரிவுகள் முடக்க நிலையில்-88 Grama Niladhari Divisions & 6 Police Divisions 13 Districsts are Under Isolation

கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து, நாட்டில் தற்போது வரை 13 மாவட்டங்களில் 88 கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் 6 பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (04) முற்பகல் 6.30 மணி முதல் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, வவுனியா ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள 6 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 14 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முதல் தற்போது தற்போது வரை படிப்படியாக நாட்டில் 88 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 05/05/2021 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை