இஸ்ரேல் தாக்குதல்; ஒரே குடும்பத்தில் 10 பேர் பலி

மேற்கு காசாவில் இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய வான் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தின் பத்து பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதல்களால் ஷட்டி அகதி முகாமில் மூன்று மாடி கட்டடம் ஒன்று தரைமட்டமானதில் அபூ ஹதாப் குடுத்தைச் சேர்ந்த எட்டு சிறுவர்கள் மற்றும் இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு அல் ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அக்குழந்தையின் தாய், உடன் பிறந்தவர்கள் நான்கு பேர், தாயின் சகோதரி மற்றும் அக்குழந்தையின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட நான்கு குழந்தைகளின் தந்தையான முஹமது அல் ஹதிதி, 'நியாயமற்ற இந்த குற்றங்களை உலகம் பார்க்க வேண்டும்' என்று மருத்துவமனைக்கு முன்னால் நின்று தெரிவித்தார். 'அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தார்கள், ஆயுதங்களை எந்தவில்லை. ரொக்கெட்டுகளையும் வீசவில்லை' என்று குறிப்பிட்டார்.

Mon, 05/17/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை