கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு இராணுவத்தினரால் 10,000 படுக்கைகள்

- இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு

கொரொனா சிகிச்சை நிலையங்களுக்காக இராணுவம் 100,000க்கும் மேற்பட்ட படுக்கைகளை வழங்குவதோடு, இராணுவ முகாம்களை இடைநிலை பராமரிப்பு மையங்களாகச் செயற்படுத்தவுள்ளது என இராணுவத் தளபதியும், தேசிய கொவிட் -19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஆயுதப்படைகள் சாதாரண படுக்கைகளையும் கொவிட்-19 நோயாளிகளுக்கு இடை நிலை பராமரிப்பு மையங்களாகச் செயற்பட முகாம்களையும் வழங்குவர். மேலும் மருத்துவமனைகளில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவின் திறனை அதிகரிப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் படி அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை விரைவில் அதிகரிப்பது தொடர்பாக யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா சிகிச்சை நிலையங்கள் அதிக பணியாளர்களுடன் பகல் மற்றும் இரவு முழுவதும் கொரோனா நோயாளர்கள் தொடர்பான முன்னேற்றங்களைக் கண்காணித்து வருவதுடன் , சுகாதாரப் பிரிவுடன் தொடர்பு கொண்டு புதிய நோயாளிகள் பற்றிய விபரங்களை சேகரித்து வருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.தனிமைப்படுத்தல் பணிகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வீடுகளில் 7 நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது அவசியம் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

Thu, 05/06/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை