பைசர் நிறுவனத்திடமிருந்து 10 இலட்சம் தடுப்பூசிகள்

அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு

பைசர் நிறுவனம் எதிர்வரும் 3 மாதங்களில் 1 இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியாவின் ‘சீரம்’ நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைத்திருந்தன.

இதனைத் தொடர்ந்து சீனாவிடமிருந்து 6 இலட்சம் ‘சைனோபாம்’ தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்தன. இதேவேளை அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் அமெரிக்காவின் ‘பைசர்’ நிறுவனத்துடனும், ரஷ்யாவின் ஸ்புட்நிக் நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன.ஸ்புட்நிக் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு 13 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவிருக்கின்றன.

 

Thu, 05/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை