ஜூன் 02 முதல் ரூ. 5,000 வழங்க நடவடிக்கை

ஜூன் 02 முதல் ரூ. 5,000 வழங்க நடவடிக்கை-Rs 5000 Allowanch for COVID19 Affected People From June 02-Shehan Semasinghe

- ரூ. 30 பில்லியன் ஒதுக்கீடு

ஜூன் 02 முதல் ரூ. 5,000 வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 கட்டுப்பாடு காரணமாக வருமானம் இழந்தவர்கள், சமுர்த்தி பெறுனர்கள், தற்போது கொடுப்பனவு பெற தகுதியான குடும்பங்களுக்கு இவ்வாறு ரூ. 5,000 கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

இதற்காக அரசாங்கம் ரூபா 30 பில்லியனை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Fri, 05/28/2021 - 15:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை