கொழும்பில் சில பகுதிகளில் எழுமாறான PCR பரிசோதனை

கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் கடந்த காலங்களில் 02சதவீதமாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்சமயம் 08சதவீதமாக உயர்வடைந்திருப்பதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி றுவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.  

குறிப்பாக கடந்த வியாழக்கிழமை முதல் இந்த அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளது.  

இதனால், நேற்றிலிருந்து கொழும்பு வடக்கு, மத்திய கொழும்பு, கொழும்பு கிழக்கு மற்றும் கொழும்பு மேற்கு ஆகிய பிரதேசத்தில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இப்பகுதிகளில் நாளொன்றுக்கு 600 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி றுவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.  

Thu, 04/22/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை