ரனிதா ஞானராஜாவுக்கு IWOC அமெரிக்க உயர் விருது

-  மன்னாரில் கௌரவிப்பு 

அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதினைப் பெற்ற (International Women of Courage) சட்டத்தரணி திருமதி ரனிதா ஞானராஜாவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மன்னாரில் நடைபெற்றது. 

சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி ரனிதா ஞானராஜாவை கௌரவிக்கும் இந்த நிகழ்வு, அவர் பிறந்த இடமான மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உள்ளிட்ட பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. 

மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 

சர்வ மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.   சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அண்மையில் அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு அளித்த சிறப்பான பங்களிப்பை அங்கீகரித்து, துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருது சட்டத்தரணி ரனிதா ஞானராஜாவிற்கு வழங்கப்பட்டது. 

இம்முறை 15ஆவது ஆண்டாக இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இதுவரை 75 நாடுகளை சேர்ந்த 155 பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். 

Mon, 04/19/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை