இந்தோனேசிய பூகம்பத்தில் ஏழு பேர் வரை உயிரிழப்பு

இந்தோனேசியாவின் மாலாங் நகரில் ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான பூகம்பத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பூகம்பத்தைத் தொடர்ந்து நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்படலாமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த பூகம்பம் 82 கிலோமீற்றர் ஆழத்தில் மையங்கொண்டிருந்தது.

நூற்றுக்கணக்கான வீடுகள், பாடசாலைகள், அரசாங்க அலுவலகங்கள், பள்ளிவாசல்கள் ஆகியவை சேதமடைந்தன. கிழக்கு ஜாவாவில் பாறைகள் விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருவருக்குக் கடுமையாகவும் 10 பேருக்குச் சிறிய அளவிலும் காயம் ஏற்பட்டது. அந்தப் பகுதியிலிருந்து பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிப்பின் முழுமையான அளவை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பாலித் தீவு உட்பட கிழக்கு ஜாவா வட்டாரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பூகம்பத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்தோனேசியாவில் ஒரு வாரத்திற்குள் இடம்பெறும் இரண்டாவது மோசமான அனர்த்தமாக இது உள்ளது. முன்னதாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 165 பேர் வரை உயிரிழந்தனர்.

Mon, 04/12/2021 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை