உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா படைகளைக் குவிப்பு: போர் பதற்றம்

பிரிவினைவாதிகளுக்கு எதிராக உக்ரைன் முழு வீச்சில் போர் தொடுத்தால் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு உதவியாக ரஷ்யா தலையிட வேண்டி ஏற்படும் என்று அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் இராணுவத்திற்கு மோதம் இடம்பெற்று வருகிறது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு ரஷ்யா இந்தப் போரில் தலையிடக்கூடும் என்று ரஷ்ய ஜனாதிபதி நிர்வாகத்தின் பிரதித் தலைவர் ட்மிட்ரி கோசக் குறிப்பிட்டுள்ளார்.

'மோதலின் வீச்சிலேயே எல்லாம் தங்கியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார். இது உக்ரைனின் முடிவுக்கான ஆரம்பமாகவும் இருக்கக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பிராந்தியத்தில் பதற்றம் அதிரித்துள்ளது பற்றி அமெரிக்கா மற்றும் ஜெர்மனி கவலை வெளியிட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை விரைவில் கருங்கடல் பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வழக்கமாக கருங்கடலில் பயிற்சி மேற்கொள்கிறது. ஆனால் இப்போது போர்க்கப்பல்களை அனுப்புவதன் மூலம், ரஷ்யாவுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவிப்பதையே காட்டுகிறது.

மேலும், ரஷ்ய கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் கிரிமியாவில் துருப்புக்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை கருங்கடல் பகுதியில் உள்ள சர்வதேச வான்வெளியில் உளவு கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளை அதிகரித்திருக்கும் அதே நேரத்தில் உக்ரைன் துருப்புகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான மோதலும் அண்மைய மாதங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 04/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை