அமெரிக்க அமைதித் திட்டம்: தலிபான் அமைப்பு நிராகரிப்பு

vஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் அமைதி முயற்சியை ஆரம்பிப்பது மற்றும் அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெறுவதை ஆறு மாதங்கள் ஒத்தி வைத்திருப்பதை தலிபான்கள் நிராகரித்துள்ளனர்.

தலிபான்களின் இணைய தளப் பக்கத்தில் இந்த அறிவிப்பு ஆங்கில மொழியில் வெளியாகி இருப்பதாக அமெரிக்காவின் செய்தித் தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

‘பைடனின் கருத்து மற்றும் அறிவிப்பான, ஆக்கிரமிப்புப் படைகள் இணங்கிய திகதிக்கு வெளியேறாவிட்டால் இஸ்லாமி எமிரேட் கடுமையான பதில் நடவடிக்கை எடுத்து, தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும்’ என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

நேட்டோ மற்றும் அமெரிக்கத் துருப்புகள் மே 1 ஆம் திகதிக்கு வெளியேறத் தவறினால் தாக்குதல் நடத்தப்படும் என்ற முந்தைய எச்சரிக்கையையே அந்த அமைப்பு மீண்டும் விடுத்துள்ளது.

“ஆறு மாத நீடிப்புத் தொடர்பில் தலிபான்களுடன் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு உடன்படிக்கையும் எந்த நன்மையையும் தராது” என்றும் தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கடந்த இரண்டு தசாப்தங்களாக மோதல் மற்றும் வன்முறைகளை சந்தித்து வருகிறது. இந்த தொடர்ச்சியான வன்முறைகள் மற்றும் அரசியல் செயலற்ற தன்மை அந்நாட்டின் நிலைமையை மேலும் மோசமடையச் செய்திருப்பதோடு அங்கு அமைதி முயற்சியையும் சாத்தியமில்லாமல் செய்துள்ளது.

Sat, 04/17/2021 - 10:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை