இந்தியாவிலிருந்து இறக்குமதியான புதிய பெட்டிகளுடன் 'யாழ். ஸ்ரீதேவி' பயணம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே சேவையில் ஈடுபடும் ஸ்ரீதேவி ரயிலானது புதிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று முன்தினம் 19ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.  

கடந்த மாதம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10பெட்டிகள் M11 locomotive இன்ஜினுடன் இணைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுகின்றன. இவை Air brake system கொண்ட ரயில் பெட்டிகளாகும். இதில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் மற்றும் 02ஆம் 03ஆம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.  

நேற்று முன்தினம் மதியம் 03.55க்கு புறப்பட்ட இந்த ரயில் காங்கேசன்துறை 22.29 இற்கு சென்றடைந்தது. நேற்றுக் காலை , காங்கேசன்துறையிலிருந்து 03.30 க்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 04.00 வந்து அங்கிருந்து  கொழும்பு கோட்டைக்கு புறப்பட்டு வந்தது. 

Wed, 04/21/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை