தலைமை பதவியில் இருந்து விலகுகிறார் காஸ்ட்ரோ

கியூபா கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமை பதவியில் இருந்து ராவுல் காஸ்ட்ரோ விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதன்மூலம் சுமார் 60 ஆண்டுகளாக காஸ்ட்ரோ குடும்பத்தினர் கியூப கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்த நிலையில் அந்த மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வரவுள்ளது. கியூபாவின் ஒரே ஆளும் கட்சியின் எட்டாவது மாநாட்டை ஆரம்பித்து உரையாற்றும்போது கடந்த வெள்ளிக்கிழமை காஸ்ட்ரோ இந்த அறிவிப்பை வெளியிட்டார். “தாய் நாட்டின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடனும் தமது திட்டத்தை நிறைவேற்றிய திருப்தியுடனும்” தாம் ஒய்வு பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தனக்குப்பின் யாரை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவராக நியமிக்கப்போகிறார் என்பது குறித்து ராவுல் காஸ்ட்ரோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ராவுல் காஸ்ட்ரோவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் 60 வயதான மிகுல் டியாஸ் கேனல் அந்த பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது. கியூபாவில் தற்போது மிக மோசமான பொருளாதார சூழல் நிலவும்போது, ஆட்சி மாற்றம், தலைமை மாற்றம் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Mon, 04/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை