Header Ads

மலையகத்தில் புதியதொரு தொழிற்சங்கம் உதயம்

சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கம் இலங்கை அரசியல் யாப்புக்கு அமைவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிலாளர் உரிமைகளையும் நலன்களையும் சட்டதிட்டங்களையும் பாதுகாப்பதற்காக மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்கியதாக அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச் செயலாளர் அம்மாசி எஸ். நல்லுசாமி தெரிவித்தார்.

குறித்த தொழிற்சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (11) ஹட்டன் சிவ ஸ்ரீ சிவசுப்பிரமணிய தேவஸ்த்தானத்தில் விசேட பூஜைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன் தலைவராக நேசன் திருநேசன் அவர்களும் பொருளாளராக கந்தசாமி லோகேஸ்வரி ஆகியோர் உட்பட பலர் செயப்படுகின்றனர்.

குறித்த பூஜை வழிபாடுகளினை தொடர்ந்து தொழிற்சங்கம் பற்றி விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று ஹட்டனில் நடைபெற்றது அதில் அவர் அங்கு தொடந்து கருத்து தெரிவ்ககையில் இன்று தொழிற்சசங்கங்கள் என்பது தொழிலாளர்களின் உரிமையினை பாதுக்காகின்ற ஒரு அமைப்பு ஆனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள் அதற்கு நான் தொழிற்சங்கங்களை குறை கூறவில்லை.நடைமுறையிலே சிக்கல்கள் இருக்கின்றன. என்று தான் கூறுகிறேன்.

மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் இருந்தாலும் கூட அவை அனைத்து தொழிலாளர் உரிமை தொடர்பாக அக்கறை கொள்ளாது தங்களது சுய நலத்திற்காக அரசியல் லாபத்திற்காக கொண்டு செல்லும் நிலையினையே காணுகின்றோம.; தோட்டத்தொழிலாளர்கள் உரிமைகள் தொடர்பாக எந்த ஒரு தொழிற் சங்கமும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை.இன்று தொழிலாளர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் ரீதியான எத்தனையோ சட்டங்கள் உள்ளன. குறிப்பாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தொழிலாளர்களுக்காக எண்ணற்ற சட்டங்களை இயற்றியுள்ளது.

அதிலுள்ள கொள்ளைகள் பிரகடனங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்று கேட்டால் அந்த கேள்வி பதில் கிடையாது.சுகாதாரமும் தொழில் பாதுகாப்பு தொழிலாளர்களுக்கு இருக்கின்றதா? என்று பாரத்தால் மலையகத்தில் அதுவும் கிடையாது அதற்கு சிறந்த உதாரணமாக இன்று தொழிலாளர்கள் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகின்றனர.; தேன் பூச்சி குளவி கொட்டுதல்களுக்கு ஆளாகின்றனர். இது போன்று எத்தனையோ துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் ஆனால் இவை எதற்குமே எந்த தொழில் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்றார்

ஹட்டன் விசேட நிருபர்.

Mon, 04/12/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.