யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை மீள திறப்பு

- பி.சி.ஆர் அறிக்கையுள்ளவர்களுக்கே வியாபாரத்தில் ஈடுபட அனுமதி 

திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைத் தொகுதி இரண்டு வாரங்களின் பின் மீளத் திறக்கப்பட்டது.திருநெல்வேலி பொதுச் சந்தையில் வழமையாக 300இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபடும் நிலையில் பி.சி.ஆர் அறிக்கையின் படி நேற்று 55வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்த்து. 

கடந்த இரண்டு வாரங்களாக திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

இந்த நிலையில் கடந்த 14நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நேற்றுக் காலை முதல் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. 

மேலும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படாத உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை கடைகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  

இந்த நிலையிலேயே பிசிஆர் அறிக்கை வைத்துள்ள வியாபாரிகள் மட்டும் நேற்று வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.   

Mon, 04/12/2021 - 16:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை