இரத்தம் உறைவு சம்பவங்கள் குறித்து கூடுதல் விசாரணை

அஸ்ட்ராசெனெக்கா நிறுவனத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட சிலரிடம் இரத்தக் கட்டிகள் உருவாவது குறித்து, ஐரோப்பாவுக்கு வெளியிலுள்ள மக்களிடம் இருந்து கூடுதல் விபரங்கள் தேவை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

தடுப்பூசித் திட்டம் குறித்த, நிறுவனத்தின் உத்தியோபூர்வ ஆலோசனைக் குழு நிபுணர்கள் அதனைத் தெரிவித்தனர்.

அஸ்ட்ராசெனக்கா நிறுவனத் தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள், அதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை விட அதிகம் என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

அந்தத் தடுப்பு மருந்தால், இரத்தக் கட்டி ஏற்படுவது ஓரளவு சாத்தியமே என்றபோதும் அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றனர் நிபுணர்கள்.

அத்தகைய பெரும்பாலான சம்பவங்கள், பிரிட்டனிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் மட்டுமே பதிவாகியுள்ளதை நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

ஏனைய நாடுகளில் அப்படிப்பட்ட சம்பவங்கள் மிகக் குறைவு.

150 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிரதேசங்களிலும் அந்தத் தடுப்புமருந்து பயன்படுத்தப்படுகிறது.

எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு அப்பாற்பட்ட நாடுகளில் இருந்து கூடுதலான தகவல்கள் திரட்டப்பட்டு, அவை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்தினர்.  

Sat, 04/24/2021 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை