சிறந்த இயக்குனராக ஆசிய பெண்ணுக்கு ஒஸ்கார் விருது

நோமட் லேண்ட் படத்தை இயக்கிய சீனப் பெண் இயக்குனர் க்ளோயி சாவ் சிறந்த இயக்குநருக்கான ஒஸ்கர் விருதை வென்றுள்ளார்.

93ஆவது ஒஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலேயே விருந்தினர்கள் பங்கேற்றனர்.

விழாவுக்கு அழைக்கப்பட்ட ஹொலிவுட் நட்சத்திரங்கள், இயக்குனர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது.

நோமாட் லேண்ட் படத்தை இயக்கிய சீனப் பெண் இயக்குனர் க்ளோயி சாவ் சிறந்த இயக்குனராகத் தேர்வு செய்யப்பட்டார். ஒஸ்கர் விருது பெறும் இரண்டாவது பெண் இயக்குனர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர் விருது 83 வயதாகும் பழம்பெரும் நடிகர் அன்டனி ஹாப்கின்ஸுக்கு 'தி பாதர்' என்ற படத்தில் நடித்ததற்காக கிடைத்துள்ளது.

சிறந்த நடிக்கைக்கான விருது பிரான்ட்சிஸ் மெக்டோராமெண்டுக்கு நோமட் லேண்ட் படத்தில் நடித்ததற்காக கிடைத்தது.

அசல் திரைக்கதைக்கான ஓஸ்கர் விருதை 'புரோமிஸ் யங் வுமன்' படத்திற்காக எமரால்ட் பென்னல் வென்றார். ஒரு கதையிலிருந்து தழுவல் செய்யப்பட்ட திரைக்கதைக்கான விருதை 'தி பாதர்' படத்திற்காக படத்தின் இயக்குனர் புளோரியன் ஜென்னர் பெற்றுக் கொண்டார்.

டென்மார்க் நாட்டின் அனத ரவுண்ட் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஒஸ்கர் விருதைப் பெற்றது. சிறந்த குணச்சித்திர துணை நடிகராக டேனியல் கலூயா தேர்வு செய்யப்பட்டார். பிரபல ஹொலிவுட் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்திற்கு சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் பிரிவில் விருது வழங்கப்பட்டது.

Tue, 04/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை