இந்து விவகாரங்கள் தொடர்பாக பாபு சர்மா குருக்கள் விளக்கம்

நாட்டில் கொவிட் தொற்று அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு தெரிவித்துள்ள கொவிட் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, தேவைப்பட்டால் தொற்று அதிகம் ஏற்படும் இடங்களை முடக்க நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நேரத்தில் இந்து ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்கள் ஆக இருக்கட்டும் அல்லது சிறப்பு பூஜை வழிபாட்டு நாட்களாக இருக்கட்டும் பக்தர்கள் இப்பொழுது கொவிட் அதிகரித்ததன் காரணமாக கட்டாயம் சுகாதார திணைக்களத்தின் அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் நிச்சயமாக பின்பற்றுமாறு மிகவும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன் என புத்தசாசன மத விவகார அமைச்சின் இந்துசமய விவகாரங்களுக்கான ஆலோசகர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இந்து மத விவகார இணைப்பாளருமான கலாநிதி ராமச்சந்திர பாபு சர்மா குருக்கள் இந்துக்களை வினயமாக கேட்டுள்ளார்.

எங்களது உயிர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் நாங்கள் இருக்கின்றோம். அதேவேளையில் இந்தத் தொற்றுநோயை தடுக்க வேண்டி மிகவும் எச்சரிக்கையுடன் முன் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். சுகாதார திணைக்கள அறிவுறுத்தலின்படி அதிகபட்சம் மிகப்பெரும் கோவில்களாக இருந்தால் 50 பக்தர்களையும், சிறிய கோயிலாக இருந்தால் அதற்கு ஏற்ற வண்ணம் அந்த பகுதி சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் ஆலய பக்தர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும் முடக்கப்படும் பகுதிகளில் இருக்கும் மக்கள் வீட்டில் இருந்து பிரார்த்தனை செய்து கொள்வதும் மிகவும் நல்லதாகும்.

ஆலய பிரதம குருக்கள் ஆலய நிர்வாகத்தினர் அடியார்களும் ஒத்துழைத்து இந்த கொவிட் தொற்றலிருந்து நாங்கள் தப்பித்து வாழ்வதற்காக எடுக்கின்ற முடிவுகளுக்கு ஒத்துழைத்து இந்த வைரஸை நாங்கள் இல்லாமல் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

எனவே நிச்சயம் நீங்கள் முகக் கவசங்களை அணிந்து கொள்ளுங்கள், சமூக இடைவெளியை பேணிக் கொள்ளுங்கள், அடிக்கடி கைகளை சோப்பு நீரால் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் உயிர் பாதுகாப்பு குறித்து மனதில் நிறுத்தி நடந்து கொள்வது மிகவும் நல்லதாக இருக்கும்.

Mon, 04/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை