இந்தியாவுடன் ஒத்துழைப்பு: நெதர்லாந்து பிரதமர் உறுதி

பிராந்திய மூலோபாயத்தில் இந்தியாவின் பங்கு தீர்க்கமாக அமையும் என்று தெரிவித்திருக்கும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவுடன் இணைந்து செயற்படும் விருப்பையும் வெளியிட்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமருக்கு இடையிலான மெய்நிகர் சந்திப்பு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே நெதர்லாந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்புப் பற்றி கூறிய இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், சந்தீப் சகர்போட்டி, ‘இந்தோ – பசிபிக் மீள் ஆற்றலுடைய விநியோகச் சங்கிலி மற்றும் சர்வதேச டிஜிட்டல் நிர்வாகம் போன்ற செயற்பாடு பற்றி இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்’ என்று குறிப்பிட்டார்.

கடல்சார் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி, சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் கடல் போக்குவரத்துக்கான சுதந்திரம் தொடர்பில் பிராந்திய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற இரு தலைவர்களிடையே இணக்கம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Tue, 04/13/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை