மியன்மார் நாட்டு தாய்லாந்து எல்லையில் உக்கிர மோதல்

மியன்மாரின் தாய்லாந்து நாட்டுடனான கிழக்கு எல்லையில் அங்கு பலம் பெற்றிருக்கும் கரேன் இன கிளர்ச்சிப் படைக்கும் இராணுவத்திற்கும் இடையே உக்கிர மோதல் வெடித்துள்ளது.

இந்த கிளர்ச்சியாளர்கள் இராணுவ முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றி மியன்மார் இராணுவத்தின் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் நாடு முழுவதும் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த மோதல் வெடித்துள்ளது.

இந்த இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் இரு டஜன் அளவான இனக்குழு கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கச்சின் மாநிலம், வடக்கு சான் மாநிலம், கயின் மாநிலம் மற்றும் பாகோ பிராந்தியத்தில் தற்போது மோதல் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

மறுபுறம் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் மீது இராணுவம் பலப்பிரயோகத்தை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் சுமார் 753 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செயற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

Wed, 04/28/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை