சீனாவின் ஆபிரிக்க முதலீட்டில் மாற்றம்

இந்த ஆண்டு ஆரம்பத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வங் யி–யின் கொங்கோ ஜனநாயக குடியரசுக்கான விஜயம் ஆபிரிக்கா தொடர்பில் சீனாவின் கடன் மற்றும் முதலீடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விஜயத்தின்போது கொவிட்–19 தாக்கத்தை கையாள்வதற்கு மத்திய ஆபிரிக்க நாட்டுக்கு 28 மில்லியன் டொலர் கடன் மற்றும் 17 மில்லியன் டொலர் ஏனைய நிதியுதவிகளையும் வழங்க வங் வாக்குறுதி அளித்தார்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக அங்கோலாவுக்கே ஆபிரிக்காவுக்கான சீனாவின் கடன்கள் சென்றன. அது எண்ணெய் சார்பு கடன்களாக வீதிகள், மின்சக்தி அணைகள் மற்றும் துறைமுகங்களுக்காக செலுத்தப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீனா 42.6 பில்லியன் டொலர் பெறுமதி மிக்க கடன்களை அங்கோலாவுக்கு வழங்கியுள்ளது. இது ஆபிரிக்க நாடுகளுக்கான கடனில் 30 வீதமாகும்.

இந்நிலையில் சீனாவுக்கு ஆபிரிக்காவின் செப்பு, கோபாற்று மற்றும் ஏனைய அரிய தாதுப்பொருட்களின் தேவை இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Thu, 04/29/2021 - 07:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை