Header Ads

நெடுந்தூர பஸ் சேவைகளில் சிவில் உடையில் பொலிஸார்

கொழும்பிலிருந்து புறப்படுகின்ற நெடுந்துார போக்குவரத்து சேவைகளில்  பஸ் சாரதிகள் வாகனம் செலுத்தும் முறை தொடர்பில் கண்காணிப்பதற்காக நேற்று (5) முதல் சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு  கடமையிலீடுபடுத்த தீர்மானிப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வாகன விபத்துக்களால் நேற்று முன்தினம் (04) 07பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

இவ்விபத்துக்களில் பெரும்பாலானவை சைக்கிள் விபத்துக்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியானது நாட்டினுள் அதிகூடிய வாகன விபத்துக்களைப் பதிவுசெய்த காலப்பகுதியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tue, 04/06/2021 - 09:24


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.