எத்தியோப்பிய கிராமத்தில் முப்பது பேர் சுட்டுக்கொலை

எத்தியோப்பியாவின் ஒரோமியா பிராந்தியத்தில் கிராமம் ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக சம்பவத்தை பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டில் இடம்பெற்று வரும் இனரீதியான வன்முறையின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தத் தாக்குதிலில் தமது அண்டை வீட்டார் கொல்லப்பட்டதாக 50 வயது விவசாயியான வொசன் அன்டெகே தெரிவித்துள்ளார். அம்ஹாராஸ் இனத்தைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

'கார் வண்டி ஒன்றை பயன்படுத்தி உடல்களை எடுத்துச் சென்ற நாம் 30 உடல்களையும் அடக்கம் செய்தோம்' என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வொசன் தெரிவித்தார்.

இரவு 9 மணியளவில் வந்த துப்பாக்கிதாரிகள் குடியிருப்பாளர்களை வெளிப்புறமாக ஓர் இடத்தில் ஒன்று சேர்த்து அவர்களை சுட்டுக்கொன்றதாக மற்றொரு குடியிருப்பாளர் சம்பவத்தை விபரித்துள்ளார்.

எத்தியோப்பியாவின் மிகப்பெரிய இனக் குழுக்களாக இருக்கும் ஒரோமோ மற்றும் அம்ஹாராவுக்கு இடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 04/02/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை