முல்லைத்தீவில் சிங்களத்தில் சாரதி அனுமதி விண்ணப்பங்கள்

- இராணுவ வீரர்கள் படிவத்தை நிரப்பிக்கொடுத்து உதவி

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலக வளாகத்திலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக சென்றவேளை தனிச் சிங்களத்தில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளமையால் அதை நிரப்ப முடியாத நிலைக்கு சாரதிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்தினம் எல்லை கிராமமான துணுக்காயில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் துரத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக சென்ற பெண் ஒருவருக்கும் தனிச்சிங்களத்தில் விண்ணப்படிவம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பப் பெண் சிங்களத்தில் யாரிடம் சென்று நிரப்புவது என்று தெரியாத நிலையில் அருகில் பஸ் தரிப்பிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு விடுமுறையில் செல்வதற்காக நின்ற இராணுவ வீரர்களிடம் தனக்கு தெரிந்த சைகையில் விபரத்தை கூறியுள்ளார்.

இதனை பார்த்த குறித்த இராணு வீரர் குடும்ப பெண்ணின் அடையாள அட்டையினையும் விபரங்களையும் வாங்கி விண்ணப்ப படிவத்தினை நிரப்பிக் கொடுத்துள்ளனர்.

நீண்ட தூரங்களில் இருந்து அரச சேவையினை பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகை தரும் மக்கள் மொழி பிரச்சினையினால் பல சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.

விண்ணப்பப் படிவம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து அரச சேவையினை மக்கள் இலகுவாக பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Mon, 04/26/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை